காலை உணவு திட்டம் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு

.                              
 காலை உணவு திட்டம்  தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்  நன்றி பாராட்டு
                                     இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும்  31 ஆயிரம் அரசு பள்ளிகளில்  பயிலும் 17 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் திருக்குவளையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் துவக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். கர்மவீரர் காமராஜரால் மதிய உணவு வழங்கப்பட்டது. அது மாணவர்களுக்கு பெரும் நன்மை விளைவித்ததை அடுத்து,  எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவாக மாற்றப்பட்டு, பிறகு கருணாநிதி ஆட்சி காலத்தில் வாரம் முழுவதும் முட்டை வழங்கும் திட்டமும், ஜெயலலிதா ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட உணவு வகையும் வழங்கப்பட்டதை பார்த்தோம். இவை அனைத்தும் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் தற்பொழுதைய முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை துவக்கி இருப்பது போற்றுதலுக்கு உரியதாகும். குறிப்பாக காலை வேளையில் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் இருவரும் வேலைக்குச் செல்கின்ற பொழுது உரிய நேரத்தில் உணவை தயாரித்து தங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்புவதற்கான சூழல் இல்லாத காரணத்தினால், அவசர அவசரமாக நேரமின்மையால் பல்வேறு மாணவ மாணவிகள் காலை உணவு அருந்துவதையே தவிர்த்து பசியோடு பள்ளிக்குச் செல்கின்றதை காண முடிகின்றது. வயிற்றுப் பசி இருக்கும் பொழுது நிச்சயமாக ஆசிரியர்கள் நடத்துகின்ற பாடத்தை கிரகிக்கின்ற தன்மை மாணவர்களிடம் இருக்காது என்பது உடல் ரீதியான உண்மை. இத்தகைய நிலையை போக்க வேண்டும் எனில் உணவிற்காக காலையில் மாணவ மாணவிகள் சிரமப்படக்கூடாது என்பதை உணர்ந்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி இருப்பது மாணவ மாணவிகளோடு கூட பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் தயாரிக்கும் உணவை உண்பதை விட வெளியில் சக  நண்பர்கள் மாணவர்களோடு இணைந்து கூட்டாக உணவு உண்கின்ற பொழுது நிச்சயமாக கூடுதலாக உணவருந்தும் நிலை மாணவர்களுக்கு உண்டாகும் என்பதும் நடைமுறை  நிதர்சனமாகும். ஆகவே உடலும் வலுப்பெறும் அறிவாற்றலும் வளம் பெறும் என்பது இந்த காலை உணவு திட்டத்தின் வாயிலாக கிடைக்கின்ற பலன்களாக எண்ணுகின்றோம். இப்படிப்பட்ட சிறப்பான திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சார்பில் நன்றியை உரித்தாக்குகின்றோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post