மயிலாடுதுறை நகரக் குளங்களில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளில் மக்களின் நலன்கருதி படித்துறை அமைத்துத் தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சிக்கு கோரிக்கை!

*மயிலாடுதுறை நகரக் குளங்களில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளில் மக்களின் நலன்கருதி படித்துறை அமைத்துத் தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சிக்கு கோரிக்கை!* மயிலாடுதுறை நகரத்தில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் உள்ள குளம், சிறைச்சாலைக்கு பின்புள்ள குளம், பெசன்ட் நகர் குளம், மாமரத்து மேடை அருகில் உள்ள குளம் என்று அனைத்து குளங்களிலும் அதன் எல்லை வரையறுக்கப்பட்டு நான்கு புறமும் மக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல நான்கு புறமும் குளத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் தடுப்பு கட்டப்பட்டு அதன் மேல் சில குளங்களில் சிமெண்ட் கற்கள் பதிக்கப்படுவதும், சில குளங்களில் தரைத்தளத்தை மேல் தளைத்தும் இணைக்கின்ற வகையில் சம அளவு இடைவேளையில் சிமெண்ட்  சாய்வு தூண்கள் அமைக்கப்படுவதுடன் மீதமுள்ள இடங்களில் மணல் நிரப்பி பசுமை புற்கள் மற்றும் இடை இடையே நிழல் தரும் அழுகிய வண்ண பூக்களைக் கொடுக்கும் மரங்களை நடவும் திட்டமிட்டிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குளத்தை அழகு படுத்துதல், மேம்படுத்துதல், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற அதே வேளையில் எந்த ஒரு குளத்திலும் படித்துறை அமைக்கப்படாமல் கட்டப்படுவது மிகவும் வேதனை அளிப்பதுடன், எதிர்காலத்தில் படித்துறை அமைக்கப்படாத காரணத்தினால் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளது என்பதையும் நகராட்சி நிர்வாகம் உணர வேண்டும். குறிப்பாக மழைக் காலங்களில் குளங்களில் தண்ணீர் தேங்கி இருக்கின்ற பொழுது கால்நடைகளோ மனிதர்களோ தவறி குளத்தில் விழுகின்ற பொழுது அவர்களை உடனடியாக காப்பாற்றுவது இயலாமல் போய்விடும். அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெறும் நீர்த்தேக்கத்திற்கான தொட்டியை போல இதனை அரசு அலுவலர்கள் எண்ணிவிடாமல் குளத்தை பொதுமக்களும் கால்நடைகளும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்திற்காக தான் முன்னோர்கள் இப்படிப்பட்ட நீர்நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அருகிலுள்ள கும்பகோணம், சிதம்பரம், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில்  இதே போன்ற திட்டத்தில் படிகளுடன் கூடிய குளங்கள் கட்டமைப்பு செய்யப்படுவதை உதாரணமாக கொண்டு,மயிலாடுதுறை நகராட்சியிலும் குள மேம்பாட்டுப்  பணிகளை மேற்கொள்ளவும்  யில்மேலும் மயிலாடுதுறை உள்ள 88 குளங்களும் ஒன்றோடு ஒன்று நீர் வழிப் பாதையில் தொடர்புடையது என்பதையும் உணர்ந்து அத்தகைய கட்டமைப்பையும் மீண்டும் புணரமைத்து குளங்களை மேம்படுத்தும் உன்னத திட்டத்தை நிறைவாக செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post