சத்தியமங்கலம்,கொமாரபாளையம்,அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோயில் 29 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா-வெகுவிமர்சையாக கொண்டாட்டம்.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ம.கொமாரபாளையம் அருள்மிகு, ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் 29 ஆம் ஆண்டு சதுர்த்தி விழா, புரட் டாசி மாதம் 1ம் நாள் 18.9.23 திங்கட் கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன்,விநாயகர்திருவுருவ சிலை பிரதிஷ்டை  செய்து, அன்று  மாலை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடை பெற்றது. 19.09.23 முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு அலங்கார பூஜையுடன்,விநாயகபெருமானுக்கு கொலுக்கட்டை, இனிப்பு, பலகாரம். பொங்கல்மற்றும்சுண்டல் படைத்து சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.


24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 7 மணிக்கு, சித்திவிநாயகருக்கு 108 குடம் தண்ணீர் ஊற்றி, பூஜை வழி பாடு நடைபெற்றது பின்னர் பகல்
12 மணி அளவில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையுடன் மஹா தீபா ராதனை நடைபெற்றது. இதில் 500க் கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டுஅருள்மிகு,சித்திவிநாயக பெருமானை வழிபட்டனர். பின்னர்
கோவிலில் மஹா அன்னதானம்
நடைபெற்றது.
மாலையில், விநாயகபெருமானின் திருவுருவச் சிலை, புஷ்ப அலங்கார த்துடன், அலங்கரிக்கப்பட்ட வாகன த்தில், கொமாரபாளையம் கிராமத் தில், திருவீதி உலா வந்து, இரவு பவானி ஆற்றில் விசர்ஜனம் நடை பெறவுள்ளது


Previous Post Next Post