மாபெரும் இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

 அறம் அறக்கட்டளை, சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் ஆகியோர் இணைந்து மொடக்குறிச்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார  மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு, தண்டுவட சிகிச்சை, இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
 இம்முகாமில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார் அவர்கள்  கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள்.


சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் டாக்டர்.தினேஷ் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்) முகாமிற்கு வந்திருந்த மக்களுக்கு   மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள். முகாமில் கலந்த கொண்டவர்களுக்கு எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.


TAMIL ANJAL REPORTER : BOOBALAN
8778258704  ; 9443655196

Previous Post Next Post