நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி கோரஞ்சால் சப்பன்தோடு என்ற பகுதியில் குமார்(43) என்பவரை  பகல் 3 மணி அளவில்  காட்டு யானை தாக்கியது இதில் பலத்த காயம் அடைந்த குமாரை  மீட்டு வனத்துறையினர் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர் இந்நிலையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இவரை சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் போஸ் மற்றும் வார்டு உறுப்பினர் வினோத் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர் மேலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வனவிலங்கு மற்றும் மனித மோதல் தொடர்கதையாகவே உள்ளது இதனை தடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாற்றி உள்ளனர் மேலும் தமிழக முதலமைச்சர் மற்றும் வனத்துறை பொதுமக்களை பாதுகாக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Previous Post Next Post