உயிரைப் பறிக்கும் ஷவர்மா உணவு வேண்டாம்! உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !

*உயிரைப் பறிக்கும்   ஷவர்மா உணவு வேண்டாம்! உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !* 

 ஷபர்மா மாமிச உணவு சாப்பிட்டதால் கடந்த ஆண்டு கேரளாவில் இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்ததை, தொடர்ந்து விழிப்புணர்வு தோன்றியது. தமிழகத்தின்  நாமக்கல்லில்  ஷவர்மா சாப்பிட்ட14 வயது சிறுமி கலையரசி மரணமுற்ற செய்தி மிகவும் சோக அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், விழித்துக் கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அசைவ உணவகங்களில் சோதனையிட்டு அழுகிய கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றி அகற்றி அழித்து  வருகிறார்கள். ஒரு மரணம் ஏற்பட்ட பிறகு தான் அதிகாரிகள் விழித்தெழுகின்ற செயல் ஒவ்வொரு சம்பவத்திலும் பார்க்க முடிகின்றது என்பது துரதிஷ்டவசமானது. ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் மாமிசம் குளிர்ச்சியான சூழலில் வைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தப்படுகிறது. இதனால் அந்த இறைச்சி சரியாக வேகாமல் கிளாஸ்ட்ரிடியம் எனும் பேக்டீரியாவை இறைச்சியில் உருவாக்குகிறது. இது போட்டுலினம் டாக்ஸினாக மாறுகிறது. ஆயினும் அதிக வெப்பநிலையில் அந்த பாக்டீரியா உயிருடன் இருக்காது. எனவே ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழப்பு என்பது அலட்சியமாக சமைத்ததே காரணம் என்கிறார்கள்.   உணவு பாதுகாப்புத் துறையை பொருத்தவரை மிக முக்கியமான ஒரு துறையாக இருப்பதனால் அதில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் நேர்மையோடு அர்ப்பணிப்புவுணர்வோடு மக்களை குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் உண்ணுகின்ற உணவையும், அதனை உற்பத்தி செய்கின்ற இடங்களுக்கும் நிறுவானங்களுக்கும் அடிக்கடி சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு தவறிழைப்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கியும், அதில் எவ்வித சமரசத்துக்கும் வாய்ப்பளிக்காமலும் பணியாற்றிட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். அதேபோல அனைத்து ஊர்களிலும் பகுதிகளிலும்  நீக்கமற நிறைந்துள்ள பானி பூரி, வடை, போண்டா, பஜ்ஜி, சூப், சிக்கன் பக்கோடா, ஆட்டுக்கால் சூப், பீட்சா, பர்கர் என மக்கள் மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ்காக சாப்பிட்டு கொண்டிருக்கின்ற உணவுக் கடைகளிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி, கெட்டுப்போன உணவுகளை அகற்றி, அக்கடைகளை பூட்டி சீல் வைத்து நல்ல உணவுகளை மக்கள் சாப்பிட வழிவகை  செய்ய வேண்டும்.            *உயிரைப் பறிக்கும்   ஷவர்மா உணவு வேண்டாம்! பொது மக்கள்  உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post