*ஊர்க்காவல் படையினரின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!*

*ஊர்க்காவல் படையினரின் மீது   முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட  *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!*                       தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு காவல்துறைக்கு உதவியாக சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, திருவிழாக்கள, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரிடர் காலங்களில் உதவிடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவையை ஆற்றுகின்ற ஊர் காவல் படையினரை ஊக்கப்படுத்தி அவர்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிடும் நோக்குடன், தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பணி நாட்கள் ஐந்து என்பதை உயர்த்தி குறைந்தது மாதத்திற்கு 25 நாட்களாக அறிவிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊர் காவல் படையினருக்கு 30 நாட்கள் பணி வாய்ப்பு  வழங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருவது என்பது குறிப்பிடதக்கதாகும். 30 பணி நாட்களுடன் நமது அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 600 ஊதியத்துடன் மாதம் 18,000மும், கேரளாவில் 626 ஊதியத்துடன் 18780மும், பாண்டிச்சேரியில்791 ஊதியத்துடன் 23730மும், கர்நாடகாவில்400 ஊதியத்துடன்12000மும், மகாராஷ்டிராவில் 700 ஊதியத்துடன் 20100மும், பீகாரில் 673 ஊதியத்துடன் 20190ம் பெறுகிறார்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 1250 ஊதியத்துடன் 37500 பெறுகிறார்கள்.  அவ்வாறு இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் ஐந்து பணி நாட்களுடன், நாள் ஒன்றுக்கு 560 வீதம் மாதம் 2800 ஊதியம் என்பது மிகவும் குறைவானதாகும். ஊர்க்காவல் படையில் பணியாற்றுகின்ற இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் அப்பணியை தவிர்த்து வேறு பணிக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்படுகிறது. மேலும் அவர்களின் முழு கவனமும் இப்பணியைச் சார்ந்தே  இருப்பதினால், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாக்கும். குறிப்பாக 2021திமுகழக தேர்தல் வாக்குறுதியில் கூட ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கப்படும் என்றும்,அவர்களின்  பணி நாட்கள் உயர்த்தி  அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயத்திலும் தனி கவனம் செலுத்தி, ஊர்க்காவல் படையினர் மீதும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட  *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post