காவிரி நீர் பிரச்சனை - கர் நாடக பந்த் எதிரொலி - சத்திய மங்கலம் வழியாக கர்நாடக செல்லும் தமிழக வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்திவைப்பு -

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அடைப்பை ஒட்டி, கர்நாடக மாநில எல்லையோர மாவட்டமான, ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் இருந்து, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மற்றும் மைசூர் செல்லும் பயணிகள் மற்றும் லாரி போக்கு வர 
த்தை 29ம் தேதி ஒரு நாள் பண்ணாரி, திம்பம், கேர் மாளம் சாம்ராஜ் நகர் வழியாக கர்நாடக மாநிலம்  செல்லும் சாலையில் பயணிக்க வேண்டாம் என காவல்துறை அறிவிப்பு வெளியானதை ஒட்டி, ,சத்திய மங்கலம் பேருந்து நிலையம் மற்றும் பண் ணாரி சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.பண்ணாரி திம்பம் வழி யாக செல்லும் கர்நாடக மாநில வாகனங்கள் மட்டுமே திம்பம் வழியாக, போலீசார் சோதனை க்கு பின் அனுமதிக்கப்பட்டது.மேலும் திம்பம் மலைப்பாதை வழியாக தாளவாடி செல்லும் பேரு ந்துகள், தலமலை வழி யாக செல்ல அறிவுறுத்தப் பட்டிருந்தது.மைசூர் மற்றும் சாம்ராஜ் நகர் செல்ல வந்த பஸ் பயணிகள் சத்திய மங்கலம் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தனர்.கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக வாகனங்கள்,பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டது.


Previous Post Next Post