கோவை தெற்கு RTO அலுவலகம் சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம்

கோவை தெற்கு RTO அலுவலகம் சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது இதில் கோவை நுகர்வோர் மையம் சார்பில் அதன் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு நுகர்வோர் சார்பில் பல கோரிக்கைகளை முன் வைத்தார் அதில் தனியார் பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹார்ன் மற்றும் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பேருந்துகளை இயக்குவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நேரத்தில் மாணவ மாணவிகளை ஏற்றிசெல்லாத அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் RTO அலுவலகத்தில் புரோக்கர் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோரியும் நுகர்வோர் சார்பில் பல புகார்கள் வைக்கப்பட்டது கூட்டத்தில் தெற்கு  மேற்கு வடக்கு மையம் உள்ளிட்ட RTO அவர்களும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
Previous Post Next Post