அறம் அறக்கட்டளை சார்பில் புனரமைக்கப்பட்ட கனகபுரம் நூலக கட்டிடம் திறப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல். ஏ...

 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கனகபுரம் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளை சார்பில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி கிருத்திகா சிவ்குமார்  கலந்துகொண்டு நூலகத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.  இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . பின்பு நூலகத்தின் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அறம் அறக்கட்டளையின் சார்பில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டது.   


இவ்விழாவில் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர், கனகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர், பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


TAMIL ANJAL REPORTER BOOBALAN
9443655196 ; 8778258704
Previous Post Next Post