சென்னையில் சாரண, சாரணிய அமைப்பின் 420 மாணவ மாணவிகள் உலக சாதனை

 டான் பாஸ்கோ மாவட்ட சாரண சாரணியர் அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 420 மாணவ, மாணவிகள் கைகளில் வண்ணம் பூசி உலக சாதனை படைத்துள்ளனர்.

டான் பாஸ்கோ மாவட்ட ஸ்கவுஸ் மற்றும் கைட்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை கீழ்பாக்கம் டான் பாஸ்கோ மைதானத்தில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில் தமிழகம் முழுவதும் டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து வந்த 420 மாணவ, மாணவிகள் கைகளால் வண்ணம் பூசி உலக சாதனை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் டான் பாஸ்கோ சாரண மாவட்ட முதன்மை ஆணையர் தாமஸ், பாரத சாரண இயக்கத்தின் மாநில உதவி செயலாளர் முத்தமிழ் பாண்டியன்,அண்ணாநகர் எம்.எல்.ஏ.,மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழா குறித்து டான் பாஸ்கோ முதன்மை ஆணையர் தாமஸ் கூறியதாவது:

யூனிகோ நிறுவனத்துடன் சேர்ந்து எங்களுடைய கப்சன் புல் புல்ஸ் வெள்ளிவிழா கொண்டாடியதாகவும், இயற்கையோடு இணைந்து உலகை பாதுகாக்க இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Previous Post Next Post