இச்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி ஈரோடுமாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

 


ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி இச்சிப்பாளையம் ஊராட்சியில் தண்ணீர் விடுவதில்லை ஆற்று குடிநீர் வசதி இல்லாததால் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம். ஆற்று குடிநீர் குழாய் எங்களது குடியிருப்பின் அருகில் 50அடி தூரத்தில் குடியிருப்பை ஒட்டிய சாலையில் பக்கத்திலேயே செல்கிறது. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தியும் தர வேண்டுகிறோம். மேற்படி குடியிருப்பில் இருந்து க.ஒத்தடைக்கு கடைகளுக்கும், பஸ்ஏறுவதற்கும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிஉள்ளதால், மாணவ மாணவிகள், நோயாளிகள், பெண்கள் மிகவும்சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், சிவகிரி செல்லும் டவுன் பஸ் No: K4,K1-ஐ காலை, மாலையில் எங்கள் குடியிருப்பு வழியாக செல்ல வசதி ஏற்படுத்தி தரவேண்டியும், கம்மங்காட்டு களம் பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கள் குடியிருப்பு வரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டியும், இடையில் டாஸ்மார்க் கடைஉள்ள காரணத்தால் விளக்கு வெளிச்சமும் இல்லாததால் பெண்கள் நடந்து வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிநீர், தெருவிளக்கு மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெறிவித்திருந்தனர், பொம்முராஜ், தீபா, தமிழ்ச்செல்வி, சாந்தி, செல்வி, நல்லசிவம் ஆகியோர் பொதுமக்கள் சார்பாக மனுகொடுத்தனர்.


Previous Post Next Post