ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை அவமதித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய சூலூர் நீதிமன்றம் உத்தரவு

 தமிழ்நாடு விஸ்வஹிந்துபரிசத்மாநில இணைபொதுச் செயலாளர் விஜயகுமார் கோவை மாவட்டம், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில்  கடந்த ஜனவரி 9 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ’ கவர்னரை கண்டித்து சூலூர் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,   திமுக நகரச் செயலாளர் கௌதமன் அவை தலைவர் பன்னீர்செல்வம் வார்டு கவுன்சிலர் விஜயகுமார் மேகநாதன் பாவேந்தர் பேரவை மணி திமுக மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் மகளிர் அணி அமைப்பாளர் கற்பகம் ராமதிலகம் செல்வராஜ் கோபால் உட்பட்ட பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு கவர்னரை தர குறைவாக  விமர்சித்தும் அவர் புகைப்படத்தை அவமதித்ததாக கூறி உள்ளார். 

மேலும் அந்த மனுவில், ’இதற்காக போட்டோ வீடியோவை வைத்து சூலூர் காவல் நிலையத்தில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து சூலூர் நீதிமன்றத்தில் குவிமுசபிரிவு156(3)கீழ்  120 பி. 124A.147, 148.504 505 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவுசெய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

 அந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரனை செய்ததில் நீதிமன்றம்  சூலூர் காவல் நிலையத்தில் மேற்படி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் வழக்கறிஞர்களான  குமரேசன்,ரவீந்திரன் ஆறுமுகம்,  கவிதா ஆகியோர் ஆஜராகி வழக்கை நடத்தி இருந்தனர். 

Previous Post Next Post