சத்தியமங்கலம் செண்பகபுதூர் எல்.பி.பி வாய்க்காலில் வெள்ளகால பாதுகாப்பு,தடுப்பு போலி ஒத்திகை. சத்திவட்டாச்சியர் தலைமையில் நடந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரசூர் உள்வட்டம் ,செண்பக ப் புதூர், கோவை மெயின்ரோடு,எல் . பி .பி. வாய்க்கால் பாலத்தில்,  30.1 0.23 மாலை 04.00 மணியளவில் வட கிழக்கு பருவமழை கால முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள கால  பாதுகாப்பு மற்றும் தடுப்பு நட வடிக்கை குறித்த  போலி ஒத்திகை சத்தியமங்கலம் வருவாய் வட்டாட் சியர் மாரிமுத்து  தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சத்தியமங்கலம் தீ தடுப்பு அலுவலர் V. ரங்கராஜ் முன்னிலையில் தீய ணைப்பு மீட்புக்குழு அணியினர் களால் நட த்தப்பட்டது. நிகழ்ச்சி யில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர சின்ன சாமி , செண்பகபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசாத்தி, வரு வாய்துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.சத்தி - கோவை மெயின் ரோடில் ஆற்றில் ஒருவர் விழுந்து, அவரைக் காப்பாற்றும் முயற்சியில், தீயணைப்புத்துறை யினர் ஈடுபடுவது போல் ஒத்திகை நடத்தினர்.

மேலும் தீடிரென தீ பிடித்ததால், தீ அணைப்பு குழுவினர் தீயை அனை த்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்கள் மற்றும் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள். நிகழ்ச்சியை ஒத்திகை நிகழ்ச்சியை என அறியா மல் கூடி நின்று வேடிக்கை பார்த்த னர். நிறைவில் தீயணைப்பு அலு வலர் ரங்கராஜ் வெள்ள கால மற் றும் எதிர்பாரத தீவிபத்து தடுப்பு குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

 

Previous Post Next Post