சென்னை அம்பத்தூரில் பயங்கர தீ விபத்து

 சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக், பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அங்கு உள்ள கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வரும் காமாக்‌ஷி மேலிபேக் பிரைவேட் லிமிடெட் என்னும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

 இங்கு பல்வேறு பிளாஸ்டிக் ,பாலித்தீன் உள்ளிட்ட பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யும் செய்யப் படுகிறது. இங்கு இரவு நேரத்தில் திடீரென தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது 

இந்த தொழிற்சாலையில் பாலித்தீன் பொருள்கள் வைத்து ரோல் டைப் டன் கணக்கில் உற்பத்தி செய்து ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது இந்த தீ அருகில் இருந்து கெமிக்கல் வைக்கபட்டிருந்த பகுதியில் பரவியதால் தீ மலமலவேன எரிய துவங்கியது இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தொரிவிக்கபட்ட நிலையில் *அம்பத்தூர்தொழிற்பேட்டை செங்குன்றம்,தண்டையார்பேட்டை, ஜே ஜே நகர், ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், எழும்பூர், ஆகிய பகுதிகளில் இருந்து தீயனைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு தீயை அணைக்க தீயனைப்பு வீரர்கள் போராடி வந்த நிலையில் கெமிக்கல் பேரர்கள் வைக்கப்பட்ட கிடங்கில் பேரல் நிறைய வெடித்து சிதறுவதால் அருகில் சென்று தீயை அணைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து ரோபோ ஸ்கைப் லிப்ட் அதிநவீன இயந்திரங்களுடன் விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர விடிய விடிய போராடி வருகின்றனர்

 இந்த தீ விபத்தால் தொழிற்சாலை அருகில் அதிநவீன மின்சாரத்தில் செலுத்தக்கூடிய உயர்மின் கோபுரம் இருப்பதால் பாதுகாப்புக்காக சுமார் ஆறு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது பிரதான சாலை என்பதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது மேலும் பாதுகாப்புக்காக போலீசார் அங்கு ஈடுபட்டு வருகின்றனர் இந்த தீ பதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு தீக்காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது விபத்தில் பல கோடி வரையிலான மூலப் பொருட்கள், ஏற்றுமதிக்கு தயாரான உற்பத்தி ஆன பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது, முழு விவரங்கள் தீயை கட்டுப்படுத்தினால் தான் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் விபத்து குறித்து அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் பிரியா ஐபிஎஸ் அவர்கள் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.மேலும் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்..



சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் மொத்தம் 6 மணிநேரம் மீட்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post