நம்பியூர் அருகே திட்டமலை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் உயிரிழந்தார் 7 கல்லூரி மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நம்பியூர் அருகே திட்டமலை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்து. 
ஓட்டுநர் உயிரிழந்தார் 
7 கல்லூரி மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள திட்டமலை அருகே அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

 தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. 

கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவடைந்து கல்லூரி மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தனர்.

 அப்போது நம்பியூரில் இருந்து ஒரு ஜீப் பொலிரோ வாகனம் அவ்வழியாக வந்துள்ளது.

 அப்போது காரை நிறுத்திய ஓட்டுனர் ரங்கசாமி நடந்து சென்ற மாணவர்களிடம் காரில் ஏறுமாறும் நான் குன்னத்தூர் தான் செல்கிறேன் கெட்டிச் செவியூர் பகுதியில் இறக்கிவிட்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.

 இதனை அடுத்து அந்த ஜீப்பில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஏறி சென்றுள்ளனர்.

 இதனை அடுத்து கார் திட்டமலை முருகன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதில் ஜீப்பில் சென்ற ஆகாஷ், சஞ்சய்குமார், கதிர்வேல், பிரவீன், நவநீதகிருஷ்ணன், ஜீவானந்தம், பகவதி சந்துரு ஆகிய 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த கதிர்வேல், மற்றும் ஜீவானந்தம் ஆகியோருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 விபத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் 7 மாணவர்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தற்போது 7 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வரப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post