தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை - இதுவரை 184536 பேர் பயனடைந்துள்ளனர் என ஆட்சியர் தகவல்.!


 தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை - இதுவரை 184536 பேர் பயனடைந்துள்ளனர் என ஆட்சியர் தகவல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :-


தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்வு மற்றும் ஆலோசனை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மூலம் சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2690 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 184536 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


மழைநீர், வெள்ளநீர் புகுந்த இடங்கள், தொற்று நோய்களை தடுக்க பன்முக நடவடிக்கைகளின் தொடர்ச்சிகளாக மக்கள் தங்கும் தற்காலிக நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


மழை மற்றும் வெள்ளத்தால பாதிக்கப்பட்ட பகுதிகளான தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், உடன்குடி, தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் நகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட நடமாடும் சிறப்பு மருத்துவக்குழுக்கள் இதர மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


பாதிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்திட உடைந்த குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய குழாய்கள் பொருத்தப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முறப்பாநாட்டில் உள்ள குடிநீரேற்றும் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் 24 மணி நேரமும் சுகாதார ஆய்வாளர்கள் குழு மூலம் குளோரினேசன் உள்ளதை உறுதி செய்த பின்னரே விநியோகம் செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் குடிநீரில் 20 லிட்டர் குடிநீருக்கு ஒரு குளோரின் மாத்திரை


வீதம் ஒவ்வொரு வீடுகளுக்கும் 10 மாத்திரைகள் வீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 60105 வீடுகளுக்கு 601050 மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் காய்ச்சிய குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


மாவட்டம் முழுவதும் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு நோய் முன்தடுப்பு மாத்திரைகள் அனைத்து கிராமங்களிலும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 70 குழுக்கள் மூலம் 92 கிராமங்களில் 4155 வீடுகளில் நோய் முன்தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் 17 வார்டுகளில் 62 குழுக்கள் மூலம் 6377 வீடுகளில் நோய் முன்தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.


கொசுக்களினால் பரவும் மலேரியா டெங்கு போன்ற கொசுப்புழு உற்பத்தியினை தடுத்திடு DBC பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சேமித்து வைக்கப்படும் நீரில் கொசுப்புழு அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


முதிர்ந்த கொசுக்களை ஒழித்திட 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் அனைத்து நீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கப்படுகிறது. பொது இடங்களில் தேங்கியுள்ள நீரால் எலி காய்ச்சல் மற்றும் தெள்ளு பூச்சியினால் காய்ச்சல் ஏற்படாமல் தடுத்திட பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு நோய் பரவாமல் தடுத்திட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post Next Post