வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிமணி இந்தியா ஆதரவுக்கரம் - யுனிமணி திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.மனோசே பேட்டி.!


 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிமணி இந்தியா ஆதரவுக்கரம் -  யுனிமணி திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.மனோசே பேட்டி.!

இது குறித்து தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுனிமணி இந்தியாவின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் மனோசே கூறுகையில்:-

"வங்கி சாரா நிதி நிறுவனமான யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (NBFC) தமிழ்நாட்டில் தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்நிறுவனம் அதன் CSR முயற்சிகளின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, போர்வைகள் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை விரிவுபடுத்தியது " என கூறினார்.

யுனிமணி இந்தியா தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத் தலைவர் திரு .கார்த்திகேயன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் மனோசே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யுனிமணி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தால் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

"யுனிமணி இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது,சவாலான காலங்களில் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவை வழங்குகிறது, இந்த நேரத்தில் நாங்கள் அவர்களுடன் ஒன்றாக நிற்கிறோம் அவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் எங்கள் CSR செயல்பாடுகள் - குழந்தை கல்வி மற்றும் வசதிகள், ஆரோக்கிம் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கான நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது "என்று யுனிமணி இந்தியாவின் இயக்குனர் மற்றும் CE CA கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post