2024 புத்தாண்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சபதம் ஏற்போம் வாரீர் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர் எல்.வெங்கட்டராமன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி*

*2024 புத்தாண்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சபதம் ஏற்போம் வாரீர் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர் எல்.வெங்கட்டராமன்  ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி*
 புதிய வருடம் பிறக்கிறது என்றாலே அனைவரின் மனதிலும் தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை அனுபவித்து வந்த   துன்பங்கள் , கஷ்டங்கள்    புது வருடத்தில் நீங்கி விடாதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் மக்கள் மனதில் உருவாகும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக நடக்கட்டும் என்கிற கூற்றுக்கு  இணங்க ஏழை எளிய நடுத்தர மக்களின் நல்ல எண்ணங்களை பிரதிபலித்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரவேண்டும். புதுச்சேரியில் ஜனநாயகம் தழைத்து ஒங்கவும் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் , நிதி நெருக்கடியை போக்கவும் , புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் , அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிபவர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றவும், அவர்களின்  நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணவும் இப்புத்தான்டு வழிவகை செய்ய வேண்டும். 
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டினை சிதைக்கின்ற முயற்சிகளில் ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சட்டங்களை திருத்தி , மக்களை பிரித்து ஆள முனைகின்றனர். இவை அனைத்துமே மாற்றப்படவேண்டும். வளமான புதுவையை இப்புத்தாண்டில் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்த புத்தாண்டில்  புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறு வதுதான் லட்சியம் என்பதை புதுவை மக்கள் மறந்து விட கூடாது. புதுவை மக்களை பாதிக்கும் பிரிப்பெய்டு மின் மீட்டர் பிரச்சனை கூட மாநில அந்தஸ்து இருந்தால் மக்களை பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட்டிருக்கும் என்பதை அரசியல் கட்சிகளும்  , மக்களும் உணர வேண்டும். 
இந்த புதிய ஆண்டில் நடைபெறும் பொது தேர்தலில், ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தனது அதிகாரத்தால் நசுக்கும் மத்திய அரசையும் , புதுவை மக்களை வஞ்சித்து  மத்திய அரசுக்கு துணைபோகும் புதுவை அரசையும் ஆட்சி மாற்றம் செய்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற இப்புத்தான்டில் சபதம் ஏற்போம் என்று கூறி புதுவை மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது புத்தாண்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளார் 
Previous Post Next Post