வன்கொடுமை சட்டத்தை (பிசிஆர்) அரசு திரும்ப பெற வேண்டும். சத்தியமங்கலத்தில் பிப்-5ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்களை கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தை (பிசிஆர்) அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பிப்ரவரி 5 ம் தேதி சத்திய மங்கலத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என (தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு  சங்கம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு மற்றும் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத் தினர் சார்பில்) தமிழ்மாநில விவசாயி கள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஈசன் முருகேஷன் செய்தியாளர் சந்திப்பின் போது பேட்டியளித்தார்.

ஈரோடுமாவட்டம்,பவானிசாகர் அருகே கரு தொட்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்ப கவுடர் என்ப வரின் விவசாய தோட்டத்திற்குள், தொடர்ந்து மலம் கழித்த நபர்களை கண்டித்த, கிருஷ்ணப்பகவுடர் மீது சத்தியமங்கலம் போலீசார் வன் கொ டுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய் துள்ளனர். மேலும். சத்தியமங்கலம் தாலுகாவில் இது போன்ற வழக்குகள் எந்த முழு விசாரணையும் இல்லாமல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, பவானிசாகர் அருகே உள்ள, நால்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழ் மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஈசன் முருகேஷன் தலைமை யில் சத்தியமங்கலம் பகுதியை சார் ந்த,அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுகத்தை சேர்ந் த முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதனை தொட ர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது 

விவசாயி கிருஷ்ணப்ப கவுடர் மீது போடப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட (பி சி ஆர்) வழக்கை திரும்பபெறவேண்டும்.வன் கொடுமை சட்டத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலத்தில் மலம் கழித்த நபர்களை, கைது செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து, தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கம் மற் றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற் படுத்தப்பட்டோர் சமூகத்தினர் சார்பில் சத்தியமங்கலத்தில் பிப்ரவரி 5ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஈசன் முருகே ஷன் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.இதில் விவசாய சங்கத் தை சேர்ந்த வேலுமணி, நட்ராஜ், மற் றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post