காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்

காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக  நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் இந்து முஸ்லீம் சீக்கியர் கிருத்துவர் என அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்..

 காந்தியடிகள் நினைவு தினத்தை  மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க தமிழக முதல்வர் வேண்டு கோள் விடுத்திருந்தார்.அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்,.மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் படி கோவையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் பாதிரியார் ஜார்ஜ் தனசேகர்,உமாபதி தம்புரான்,அப்துல் ரஹீம் இம்தாதி,டோனி சிங் என  அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்..முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது..இதனை தொடர்ந்து மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்னும் கருப்பொருளில் உறுதிமொழி ஏற்றனர். இதில்,, மனிதநேயம் காப்போம், மத வெறியை விலக்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காப்போம். மதவெறி சக்திகளை வேரறுப்போம். பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம். அமைதியான இந்தியாவை உருவாக்குவோம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்…இந்நிகழ்ச்சியில்  பல்சமய நல்லுறவு இயக்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,அபு தாகீர்,காந்தி,வழக்கறிஞர் இஸ்மாயில்,கோட்டை செல்லப்பா,மெட்டல் சலீம்,ஜீவசாந்தி சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
Previous Post Next Post