கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான முய் தாய் பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தல்

கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான   முய் தாய்  பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்…

கோவை கரும்புகடை பகுதியில் செயல்பட்டு வரும் ஆக்டகன் ஃபைட்ஸ் கிளப் சார்பாக அதன் நிறுவனர் ஃபெரோஸ் பாபு தலைமையில்  கிக் பாக்சிங்,முய்தாய் பாக்சிங் என தற்காப்பு கலைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் பயிற்சி பெற்று மாவட்ட,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில்,   இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான பாக்சிங்  போட்டி  சென்னை ஆவடியில் நடைபெற்றது..சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,கோவை,சேலம்,ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.வயது,எடை,ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில்,கோவை ஆக்டகன் ஃபைட்ஸ் கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து  முறையே எட்டு தங்கம்,ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.இதே போல இதில்  இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில்  தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்..வெற்றி பெற்று  கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ,பயிற்சியாளர்கள் ஃபெரோஸ் பாபு,சபரி,சிக்கந்தர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..தொடர்ந்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவ,மாணவிகள் வரும் காலங்களில் வெற்றிகளை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்…
Previous Post Next Post