கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்

கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்....

கோவை கவுண்டர் மில் பகுதியில்  உள்ள,கிரீன் பீல்ட் வளாகத்தில் உள்ள வி சி எஸ் எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டு விழா நடைபெற்றது.. பள்ளி நிர்வாக தலைவர் செல்வி சுகுணா, தாளாளர் ஹெரால்டு ஷாம், செயலாளர் கில்ஃபோர்ட் ஹெரால்ட் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,  சிறப்பு விருந்தினர்களாக, கே ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி பக்தவச்சலம்  மற்றும் சி.ஆர்.பி.எப்.டெபுடி கமாண்டர் ராஜேஷ் தோக்ரா ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்..நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட  அளவில் விளையாட்டு போட்டிகளில்  கலந்து கொண்டு வெற்றி மாணவ,மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மேலும்  அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்களுக்கும் சிறப்பு  பரிசுகள் வழங்கப்பட்டது..விழாவில் முக்கிய நிகழ்வாக நாட்டின் பாதுகாப்பிலும்,பேரிடர் காலங்களிலும் முன் கள பணியாளர்களாக பணியாற்றும் சி.ஆர்.பி.எஃப்.வீரர்கள் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.மேலும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் லோகித் எனும் சிறுவன் செய்த உலக சாதனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயின்ற மறைந்த மாணவியின் நினைவாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது..நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கூடியிருந்த பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கண்டு ரசித்தனர்..
Previous Post Next Post