கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள சமஷ்டி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் குழந்தைகள் நடனமாடி அசத்தல்

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள  சமஷ்டி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 

கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் சமஷ்டி சர்வதேச பள்ளி உள்ளது.இப்பள்ளியில் குழந்தைகளின் கலை குறித்த திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு விழா நடைபெற்றது.
முன்னதாக விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சமஷ்டி பள்ளி நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா,என்சிசி லிமிடேட் நிறுவனத்தின் சுகுணா அல்லூரி, மாணவர் பிரத்தியூஷ் ,பெற்றோர்  கிருஷ்ணமூர்த்தி,  திவ்யா, ஆசிரியர் சோபனா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆண்டு விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சமஷ்டியின் சிறந்த பரிமாற்ற வளர்ச்சி குறித்து  மிளிரும் லேசர் கருவி மூலம் காண்பிக்கப்பட்டது.பின்னர், வாழ்க்கை  பல வண்ணங்களை கடந்து செல்கிறது என்றும், ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு குணத்தைக் கொண்டுள்ளது என்றும் கருப்பு நிறத்தில் அச்சத்துடன் தொடங்கும் வாழ்க்கை வெள்ளை நிறத்தில் தூய்மையாக முடியும்  பள்ளி வாழ்க்கை பயணம் குறித்து வண்ணங்களின் அடிப்படையில் மாணவர்கள் நடனங்களை அரங்கேற்றினர்.
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் நிறங்களுக்கு ஏற்ப நடனத்தை ஆடி திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் ஒவ்வொரு நடனத்திற்கு முன்பும் அந்நிறத்தை பற்றிய லேசர் காட்சியும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.இந்தவிழாவில் பள்ளி நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, இயக்குனர்கள்  மீரா பண்டாரி அரோரா,  மேஜர் நவீன் மேத்தா, பள்ளி முதல்வர் தீபா தேவி,  ஆசிரியர்கள், பெற்றோர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post