குலசேகரப்பட்டணம் வின்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் ஏவ திட்டம் : 18 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவிப்பு.! - மீனவர்களுக்கு எச்சரிக்கை.!


 குலசேகரப்பட்டணம் வின்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் ஏவ திட்டம் : 18 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவிப்பு.! - மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
 
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டணம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்சேமாக 28.02.2024 அன்று அட்ச தீர்க்க ரேகைகளிலிருந்து (Launch pad Coordinates: Latitude 08° 22' North, Longitude 78° 02' East) ஒரு ரோகினி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் (ஸ்ரீஹரிகோட்டா Satish Dhawan Space Centre, SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நேர்வில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை துாண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 28.02.2024 அன்று காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அனைத்து வகை ஆளில்லா வானூர்தி (Drones and Unmanned Vehicle) சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், மற்ற படகுகள் மற்றும் கட்டுமரம் ஆகியவற்றின் வழியாக மீனவர்கள் / பொதுமக்கள் மேற்படி பகுதிக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் - அஹமத்
புகைப்படம் - சித்திக்

Previous Post Next Post