ரயில்வே மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் ஆடல்பாடல் குத்துப்பாட்டு ஆவேசமடைந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தடுத்து நிறுத்தினார்

*ரயில்வே மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் ஆடல்பாடல் குத்துப்பாட்டு! ஆவேசமடைந்த  சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தடுத்து நிறுத்தினார்!*       
மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாப்படுகை, நீடூர் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா 26-2-2024 இன்று  காலை  பிரதமர் பங்கேற்று காணொலி வாயிலாக  அடிக்கல் நாட்டும் விழாவின் துவக்கத்தில் கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும்  என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குத்துப் பாடல்களுடன் ஆடல் பாடல் நிகழ்வு நடைபெற்றதை பார்த்து மிகவும் கோபமும் வருத்தமும் ஆவேசமும் அடைந்து மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நேராக  மேடைக்குச் சென்று உடனடியாக ஆடல் பாடலை நிறுத்துமாறும், அரசு விழாவிற்கு ஏற்ற பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் கூறி தடுத்து நிறுத்தினார். விழாவிற்கு வந்திருந்த அத்தனை பேரும் இந்நிகழ்ச்சிகளை பார்த்து மனம் நொந்து  பாதிக்கப்பட்டு அமர்ந்திருந்த நிலையில், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நிறுத்தியதை அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்பட அனைவரும் பாராட்டினார்கள்.மேலும் தேசியகீதம் பாடப்படாமல் இவ்விழா நடைபெற்றது மிகவும் வருத்தமளிப்பதாகவும் எதிர்காலத்தில் குறைகள் இன்றி விழாக்களை நடத்திட திட்டமிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post