ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா - 1,05, 96,146 ரூபாய் ரொக்கம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி உட்பட பக்தர்கள் காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்.


 ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் அடுத்துள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திரு விழா, கடந்த 26-ம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் திரண்டு, குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். குண் டம் திருவிழாவை முன்னிட்டு, ஏராள மான பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை, காணிக்கையாக உண்டியல் களில் செலுத்துவது வழக்கம். 

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு ள்ள, 20 உண்டியல்கள் திறக்கப்பட்டு ஒவ்வொன்றாக எண்ணப்பட்டது.எண் ணப்பட்ட உண்டியல்களில் இருந்து, ஒரு கோடியே, ஐந்து லட்சத்து,தொண் ணூற்றி ஆறாயிரத்து, நூற்றி நாற்ப் பத்தி ஆறு ரூபாய் ரொக்கம் மற்றும்  295 கிராம்தங்கமும்,757கிராம்வெள்ளி ஆகியவை உண்டியல்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் மூலம், வங்கியில் செலுத்தப்படவுள் ளது. 

உண்டியல் எண்ணும் பணி,கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் இரா மேனகா தலைமையில்  பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக் கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர்.சு.சுவாமிநாதன், சத்தி இந்து சமய அறநிலையத்துறை, ஆய்வாளர் தே. சிவமணி, பரம்பரை அறங்காவலர்கள்.வீ.புருஷோத்தமன்,ராஜாமணி தங்கவேல்,புஷ்ப லதா கோதண்டராமன், டி.அமுதா, எம்.பூங் கொடி மற்றும் கண்காணிப்பாளர், .பால சுந்தரி ஆகியோர் முன்னிலை யில், அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த உண்டி யல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.




Previous Post Next Post