திருப்பூரில் நடுரோட்டில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்... பரபரப்பு வீடியோ

திருப்பூர் மத்திய பேருந்து நிலையட்த்துக்கு வெளியே சாலையோர கடை அமைக்க அனுமதிக்கவில்லை எனக்கூறி நடுரோட்டில் வாலிபர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாக இருக்ககூடிய இடமாகும். இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான தள்ளுவண்டி கடைகள், பிளாட்பார கடைகள் செயல்படுகின்றது.

 இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த கணபதி என்பவர் பழைய பேருந்து நிலையத்துக்கு வெளியே சாலை ஓரக்கடை அமைத்து நடத்தி வந்தார்.  மாநகராட்சி அதிகாரிகள் தனது கடையை மட்டும் அகற்ற சொல்வதாக கூறி திடீரென்று கடையில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து நடுரோட்டில் போட்டு உடைத்தார். 

அப்போது கணபதியை போலீசார் தடுத்து சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் சமாதானம் ஆகாத  கணபதி, கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். 

போலீசார் கணபதியை தடுத்து அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். 

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் பொதுமக்களுக்கு இடையூறாகவும், வியாபாரிகளுக்கு இடையூறாகவும் இருக்கும் இந்த கடைகளை அகற்றாமல் மாநகராட்சி அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக அனுமதி அளிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். 

Previous Post Next Post