திம்பம் மலைப்பாதையில் கார் மீது கவிழ்ந்த லாரி... 3 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி

 ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் ஆம்னி கார் மீது கரும்பு லாரி கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திம்பம் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தினசரி தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திம்பம் மலை பாதை வழியாக வந்து கொண்டிருந்தனர். 

அப்போது தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றுச் சென்ற லாரி ஒன்று திம்பம் மலை பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 27 வது கொண்டே ஊசி வளைவு அருகே  சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கரும்பு கட்டுகள் காரின் மீது சரிந்து இடுப்பாடுகளுக்குள் கார் சிக்கியது.



இதனையடுத்து அங்கிருந்து வாகன ஓட்டிகள் கரும்பு கட்டுகளை அகற்றி காரில் சிக்கவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 3 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மூன்று பேர் காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கரும்பு கட்டுகளை அகற்றினர்.

ஆனால் இந்த விபத்தில் காருக்குள் நீண்ட நேரமா சிக்கி இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்கப்பட்ட இரண்டு பேர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக காலை 7 மணியிலிருந்து திம்பம் மலைப்பாதையில் கடுமையாக போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ஆசனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தாளவாடி முருகானந்தன்


Previous Post Next Post