6 டன் எடையுள்ள தேரை தோள்களில் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்த பக்தர்கள்

 மனிதர்களே சக்கரமாக மாறும் தூக்கு தேர் - 6 டன் எடையுள்ள தேரை தோள்களில் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சுற்றி வந்தனர் - பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் மேளம், தப்பாட்டம், பட்டாசு முழங்க சூரமாகாளியம்மன் கோயிலில் இன்று மாலை வெகு விமரிசையாக நடந்த வித்தியாசமான தூக்கு தேர் திருவிழா 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு

சூரமாகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 

வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மிக முக்கியமான, வித்தியாசமான திருவிழா தேர் தூக்கும் திருவிழா ஆகும்.

தூக்குதேர் திருவிழா இன்று மாலை

வெகு விமரிசையாக நடந்தது. பொதுவாக தேர் என்பது பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். ஆனால் இங்கு தேருக்கு சக்கரம் இல்லை. மனிதர்களே சக்கரமாக மாறி சுமார் 6 டன் எடையுள்ள தேரை இந்த கிராமத்தைச் சேர்ந்த 

சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலை சுற்றி வந்தனர். இந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிங்கப்பூர், துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த தூக்கு தேர் திருவிழாவிற்காகவே

தங்களது சொந்த ஊரான சூரப்பள்ளம் கிராமத்திற்கு 

வருகைதந்து தேர் தூக்கி விழாவை சிறப்பாக 

கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்த தூக்கு தேரை பார்ப்பதற்கு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தூக்கு தேரை பார்த்து சூரமாகாளியம்மனை வழிபட்டுச் சென்றனர். தூக்கு தேருக்கு முன்னதாக மேளம், தப்பாட்டம் முழங்க, பட்டாசு வெடிக்க, பிடாரியம்மன் முன்னே செல்ல தூக்கு தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை  பட்டுக்கோட்டை  தாலுக்கா போலீசார் செய்திருந்தனர்.

Previous Post Next Post