தொடர் கேடு விளைவிக்கும் திருக்காஞ்சி நித்யா பேக்கேஜ் தொழிற்சாலையை மூடவேண்டும் இல்லையேல் போராட்டம் ஆர்.எல்.வி பேரவை மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ அறிக்கை

மனித இனத்திற்க்கே கேடு விளைவிக்கும் திருக்காஞ்சி நித்யா பேக்கேஜ்  தொழிற்சாலையை மூடவேண்டும்
 இல்லையேல் நிறுவனத்தலைவர் ஆர்.எல் வெங்கட்டாராமன் அனுமதியுடன் போராட்டம் நடத்துவோம் ஆர்.எல்.வி பேரவை மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ அறிக்கை 
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஒதியம் பட்டு திருக்காஞ்சி ரோட்டில் நித்யா பேக்கேஜ் லிமிட்டெட் கம்பனி உள்ளது. இந்த கம்பனியில் இருந்து வெளியேற்றக்கூடிய நச்சுப்புகை மற்றும் நச்சுக்கழிவுகள் , சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. கம்பெனியை சுற்றி 20 கிராமங்களுக்கு மேல் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் கம்பெனியிலிருந்து வெளிவரக்கூடிய நச்சுப்புகையினாலும் நச்சுக்கழிவுகளாலும் சுகாதார சீர்க்கேட்டால் அவதிப்படுகின்றனர். இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் , டிபி ,ஆஸ்த்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகல் முழுக்க கூலி வேலை செய்துவிட்டு நிம்மதியாக தூங்க வீட்டுக்கு வந்தால் , அவர்களை, இந்த தொழிற்சாலையின் நச்சு புகையினால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இந்த மூச்சு திணறல் ஏற்பட்டு நிறையபேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தொழிற்சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் குளூனி ( சிபிஎஸ்சி ) பள்ளியும் செயல் படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த தொழிற்சாலையை அகற்ற கோரி சுற்றியுள்ள கிராம மக்கள் பலமுறை எடுத்து கூறியும் அரசு கண்டு கொள்வதில்லை . ஒரு சில அரசியல் வாதிகளின் ஒத்துழைப்போடு இந்த கம்பனி செயல் படுவதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. கம்பனி ஆரம்பிக்கும்போது மாசு கட்டுப்பாடு வாரியத்தில் கொடுத்த தகவல்களும் , அனுமதி பெற்ற பிறகு தற்போதய நிலை பற்றி உயர்நிலை அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரண நடத்திட வேண்டும் மக்களுக்கு உண்மை நிலையை அரசு தெளிவுபடுத்த வேண்டும். தொழிற்சாலையின் தற்போதய நிலைக்கு தான் அரசு அனுமதி வழங்கி இருப்பின் , மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இயங்கும் தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள். அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். 20 கிராமங்களின் மக்கள் நலன் கருதி நித்யா பேக்கேஜ் தொழிற்சாலையின் அனுமதியை ரத்து செய்து தொழிற்சாலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல் ஆர்எல்வி நிறுவனத்தலைவர் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களின் அனுமதி பெற்று மக்களின் சீர்கேட்டை குலைக்கும் நித்யா பேக்கேஜ் தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தி ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்
Previous Post Next Post