சேலத்தில் நடைபெற்ற 71 வது மாநில அளவிலான மூத்தோர் கபடி போட்டிகளில் 38 அணிகள் பங்கேற்ற நிலையில். திருப்பூர் மாவட்ட பெண்கள் அணியினர் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வென்று அசத்தினார்கள்.
மேலும் திருப்பூர் மாவட்ட அணியில் இருந்து வீராங்கனைகள் புவனேஸ்வரி, கதிஜா ஆகியோர் தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை போட்டிகளில் விளையாடவும் தேர்வாகி உள்ளனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திருப்பூர் மாவட்ட பெண்கள் அணி முதலிடம் பெற்று உள்ளது. வெற்றி பெற்ற அணியினருக்கான பாராட்டு விழா திருப்பூர் மாவட்ட கபடிக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கபாடிக் கழக சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், துணைச் சேர்மன்எஸ். முருகானந்தம், துணைத் தலைவர்கள்கொ. ராமதாஸ், லைன்ஆர். நாகராஜ்,கே.ஆர்.பி. செல்வராஜ், செய்தித் தொடர்பாளர் சு. சிவபாலன், துணைச் சேர்மன் சன்வின்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு வருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர்ரகுகுமார், மாவட்ட கபாடிக் கழக தலைமைப் புரவலர், துணை மேயர்எம்.கே.எம். பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழக சீனியர் துணைத் தலைவஏ.பி.எஸ். ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்தப் பரிசுகளை மாவட்ட கபாடிக் கழக சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன் சார்பில் ரூ.2.50 லட்சமும், மாவட்ட கபாடிக் கழகத்தின் சார்பில் செயலாளர் ஜெயசித்ரா ஏ. சண்முகம் சார்பில் ரூ.75,000 மும், மாவட்ட துணைத் தலைவர் கொ. ராமதாஸ் ரூ.50,000 மும், துணைத் தலைவர் நாகராஜ் ரூ.25,000 ம் என திருப்பூர் மாவட்ட பெண்கள் அணிக்கு பரிசாக தலா ரூ.25,000 வீதம் ரூ.3.50 லட்சன் ரொக்க பணம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட நடுவர்குழு தலைவர்ஆர். முத்துசாமி வரவேற்றார்.
விழாவில் மாவட்ட கபாடிக் கழக புரவலர்கள்பிரேமா மணி, மகாலட்சுமி ரத்தினசாமி, தேர்வுக்குழு தலைவர் வி.டி. ருத்ரன், செயற்குழு உறுப்பினர் தேவராஜ், துணைச் செயலாளர்கள் . வாலீசன்சின்னு,பி. செல்வராஜ்,மனோகரன், டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர் பி. ரங்கசாமி, நடுவர்குழு கன்வீனர் ஏ.சி. சேகர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் , மேலாளராக வாசுநாதன் சென்றார்கள். அணித் தலைவியாக யாழினி தலைமையில் திருப்பூர் மாவட்ட பெண்கள் அணி விளையாடினர். இந்த அணியைச் சேர்ந்த கதீஜா பீவி மற்றும் புவனேஸ்வரி ஆகிய இரண்டு வீராங்கணைகள் மே மாதம் மகாராஷட்ராவில் நடைபெறும் பெடரேசன் கப் கபாடிப் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.