சடாரி வைக்கும் சிவன் கோவில்

சிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்! - இது திருநல்லூர் ஸ்பெஷல்!


நாம் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்போது, நமக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுப்பதுடன், நமக்கு பகவானின் திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பகவானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரியை நம் தலையில் வைத்து எடுப்பார்கள். அப்படி பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதுபோலவே, ஒரு சிவன் கோயிலிலும் சடாரிவைத்து எடுக்கிறார்கள். பக்தர்களின் தலையில் சடாரி வைக்கும் நடைமுறை, தொன்மைச் சிறப்பு வாய்ந்த, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் முடியில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான். இதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.


திருச்சத்திமுற்றம் தலத்தைத் தரிசித்த திருநாவுக்கரசர், ``இறைவா, யமன் என்னைக் கொண்டுபோகு முன்னர் உன் திருவடியை என் தலை மீது சூட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்" என மனமுருகி வேண்டினார்.


திருச்சத்திமுற்றத்தில் வேண்டிக்கொண்ட திருநாவுக்கரசருக்கு, நல்லூர் திருத்தலத்தில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வதித்தார். அதை நினைவுகூரும் வகையில், இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிவபெருமானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரிவைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசருடைய தலைமீது இறைவன் தன் திருவடியை வைத்து ஆசீர்வதித்த நிகழ்வு நடந்த இந்த நல்லூர்த் திருத்தலம் பல்வேறு சிறப்புகளை உடையது.


தினமும் ஐந்து முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது. ஆதலால் கல்யாண சுந்தரேஸ்வரர் `பஞ்சவர்ணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.


நவகிரகம் எதுவும் இல்லாத சிவ திருத்தலம் இது.


குந்திதேவிக்கு தோஷ நிவர்த்தி அUளித்த 'சப்த சாகர' தீர்த்தம் இருக்கும் இடம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் இப்படி ருத்ரபாதம்வைப்பதுண்டு


Previous Post Next Post