ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

 


*இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லவில்லை என அறிவிப்பு*


இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாமல், ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையில் இறால் மீன்களை கொள்முதல் செய்வதால் இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஓரு நாள் மட்டும் கடலுக்கு செல்லவில்லை என மீனவர்கள் அறிவிப்பு.


ஒரு கிலோ இறால் மீன் 520 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 60 நாட்கள் தடைகாலத்திற்கு பின் இன்று ஒரு கிலோ இறால் மீன் 350ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக மீனவர்கள் வேதனை. தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை.