பொள்ளாச்சியில் உலக சாதனைக்காக பெண்கள் யோகாசனம்

யோகா தினத்தை ஒட்டி பொள்ளாச்சியில் உலக சாதனைக்காக பெண்கள் மட்டும் பங்குபெற்ற யோகாசனம் நடைபெற்றது
பொள்ளாச்சி :ஜூலை :16
உலக யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி யோகா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் குறிப்பாக யோகாசனத்தை பெண்கள் கற்றுக் கொள்வதால் மனம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ் நாட்களை கழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமாக பொள்ளாச்சி டாப்ஸ் யோகா சென்டர் சார்பில் பெண்கள் மட்டும் பங்கு பெறும் யோகாசனம் நடைபெற்றது பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகில் நடைபெற்ற கூட்டு யோகாசனத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் குடும்ப பெண்கள் என 300க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு உலக சாதனைக்காக யோகாசனம் செய்தனர் பிராணயாமம்,சூரிய நமஸ்காரம்,
தாடாசன்,ஓம் மந்திரம் உச்சரித்தல் என பல்வேறு விதமான ஆசனங்களை செய்தனர்
ஒரே நேரத்தில் குழந்தைகள்
மாணவிகள் பெண்கள் யோகாசனம் செய்து காட்டியதை கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தனர்