அரக்கோணத்தில் 4 மாடுகள் அடுத்தடுத்து சாவு

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அடுத்தடுத்து  4 மாடுகள் திடீர் என சுருண்டு விழுந்து இறந்துள்ளது, முன்று மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அரக்கோணம் அடுத்த சின்ன மோசூரில் அடுத்தடுத்து நான்கு மாடுகள் இறந்துள்ளது, முன்று மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்கள்.


அரக்கோணம் அடுத்த சின்ன மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன். இவர் தனது வீட்டில் 14 மாடுகளை வளர்த்து வந்தார். தனது விவசாய நிலத்தில் பசுந்திவனம் வளர்த்து அந்த படுந்திவனம் மாடுகளுக்கு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.


வழக்கம்போல் நேற்று மாலை தனது நிலத்தில் விளைவித்த *சொர்கம்* வகை பசுந்திவனத்தை மாடுகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த திவனத்தை உண்ட பசுக்கள் மற்றும் காளைகள் நேற்று மாலை மெல்ல வாயில் நுரை தள்ளிய நிலையில் இரவு அடுத்தடுத்து இரண்டு பசுக்கள் இரண்டு காளை மாடுகள் தனது நிலத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளன.


தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மேலும் ஆபத்தான நிலையில் உள்ள முன்று பசு மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்கள்.


இது குறித்து இராணிப்பேட்டை கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் உதயகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் நெற்பயிர் பயிரிடுவதில்லை. அதனால் வைக்கோல் பற்றாக்குறை.மேலும் இயற்கை புல்லும் கிடைப்பதில்லை. இந்நிலையில் பயிரிடப்படும் பசுந்திவனங்கள் வளர்க்கப்பட்டு கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வகை பசுந்திவனங்கள் முழுமையாக வளர்ந்த பின் கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். அவைகள் இளம் புல்லாக உள்ளபோது அறுவடை செய்து வழங்கும் போது சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை வெயிலில் உலர்ந்த பின் கொடுக்க வேண்டும். அறுத்தவுடன் இளம் புல்லாக கொடுக்கும்பட்சத்தில் அதில் நச்சுத்தன்மை இருக்க வாய்ப்புள்ளது. அப்படியாக உண்டதால் இறந்தா? அல்லது வேறு காரணங்களுக்காக இறந்ததா.? மேலும் என்ன காரணம் குறித்து அறிய பசுக்களின் ரத்த வகை மாதிரி எடுக்கப்பட்டு ராணிப்பேட்டை கால்நடை ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,பின்னர் இறப்பிற்கு என்ன காரணம் என்கிற கோணத்தில் விசாரனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


விவசாயி பச்சையப்பனின் நான்கு மாடுகள் அடுத்தடுத்த இறந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்கள். சுமார் 1 லட்சம் மதிப்பிலான 4 பசுக்கள் இறப்பிற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்கள்.


Previous Post Next Post