புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 வது நாளாக போராட்டம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 வது நாளாக தொடர்ந்து மருத்துவர்கள், மேற்கு வங்க மாநிலத்திற்கு எதிராக போராட்டம்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவமனை பயிற்சி மையங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்மந்தமாக இந்தியா முழுவதும் இந்த பிரச்சினைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று தொடர்ந்து 3 வது நாளாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை,மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைக்கு பெரும் பாலும், நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் முதல் உள்நோயாளிகள் வரை தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . ஆனால் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 700க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் இல்லாமல் வெறிச்சோடிக்காணப்பட்டது. ஆனால் மருத்துவர் ஆர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும்,மேலும் உள்நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறி வருகிறார்.


Previous Post Next Post