வங்கிக்கு களப்பயணம்  சென்ற மாணவர்கள் 

கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்    பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றனர்.எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து ஏழாவது   ஆண்டாக வங்கி களப்பயணம் செல்வது குறிப்பிடத்தக்கது. வங்கியின் முதன்மை   மேலாளர் வேல்முருகன்   தலைமை தாங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.வங்கி அலுவலர் கண்ணன்    மாணவர்களுக்கு  செயல்முறை விளக்கம் அளித்தார்.வங்கியின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.ஆசிரியை செல்வமீனாள்,ஆசிரியர் கருப்பையா ஆகியோர்மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.மாணவி சிரேகா நன்றி கூறினார்.


வங்கி அலுலவர் கண்ணன் வங்கியில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு வங்கியின் சேவை குறித்தும் எடுத்து கூறினார்.வங்கியில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,காசோலை எடுக்கும் படிவம்,நகை கடன் செலுத்துவது , செலுத்திய பணத்தை எடுப்பது , ஏ டி எம் இயந்திரத்தினை பயன்படுத்துவது எவ்வாறு  என்பதை செய்து காண்பித்து விளக்கமாக எடுத்து கூறினார்.எ .டி .எம்.அட்டை தொடர்பாக யார் எந்த தகவல் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என்று விளக்கி சொன்னார்கள். எ .டி .எம்.அட்டை தொலைந்து போனால் 1800112211 மற்றும் 18004253800 என்று எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள்.கள்ளநோட்டை எளிதாக கண்டுபிடிக்க வழிமுறைகள் சொல்லப்பட்டது.கண்தெரியாத மாற்றுத்திறனாளிகள் நோட்டுகளை எளிதாக கண்டுபிடிக்க பணத்தின் இடது புறம் சொரசொரப்பாக இருக்கும் என்றும்,அதனை தடவி பார்த்து எளிதாக எத்தனை ரூபாய் என்பதை  அறிந்து கொள்ளலாம் என்று மேலாளர் விரிவாக விளக்கினார். வங்கி மேலாளரிடம் மாணவர்கள் ஜோயல்,அய்யப்பன்,அஜய் பிரகாஷ்,சபரி,சக்திவேல்,சந்தியா,கீர்த்தியா ,சிரேகா  ஆகியோர் சந்தேகங்கள்  கேட்டு பதில்கள் பெற்றனர்.


 பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஏற்பாட்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரடியாக களப்பயணம் சென்றபோது வங்கியின் முதன்மை  மேலாளர் வேல்முருகன்  தலைமையில் வங்கி அலுவலர் கண்ணன்  மாணவர்களுக்கு வங்கி தொடர்பாக விரிவாக விளக்கினார்.