நான் ராஜினாமா செய்யவேல.. - வெள்ளகோவில் சாமிநாதன் சொல்கிறார்

மாநில இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை உரிய நேரத்தில் தலைவர் சரியான முடிவெடுப்பார் என திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறி உள்ளார்.


தண்ணீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத தமிழக அரசைக்கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . காலிக்குடங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக்கண்டித்தும் , தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத தமிழக அரசு பதவி விலககோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர் . இதில் முன்னால் அமைச்சரும் மாநில இளைஞரணி செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், திமுக  . பின்மாவட்ட கலந்துகொண்டிருந்தார்செயலாளர் க.செல்வராஜ், டிகெடி. நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேட்டியளித்த வெள்ளகோவில் சாமிநாதன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் , கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததையும் தமிழக அரசு மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது எனவும் , இளைஞரணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா  செய்ய கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்றார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு  பதவியை விட்டுகொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு 'திமுக தலைவர் உரிய நேரத்தில் சரியான முடிவெடுப்பார் எனவும் இப்போதைக்கு கடிதம் எதுவும் வழங்கவில்லை' எனவும் தெரிவித்தார்