அரசின் சிமெண்ட், இரும்பு கம்பிகள் வழங்கும்திட்டம்

திருப்பூர்  மாவட்டத்திற்குட்பட்ட 13 வட்டாரங்களின் கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையால் செயல்படுத்தப்படும் குடியிருப்புத் திட்டங்களான பிரதம
மந்திரி  கிராம குடியிருப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் சூடிய சக்தியுடன்
கூடிய பசுமை வீடுகள் திட்டம் ஆகிய திட்டங்களின் பயனாளிகளுக்கு வீடுகள்
கட்ட தேவைப்படும் சிமெண்ட் மூட்டைகள், இரும்புக் கம்பிகள் ஆகியன அலுவலக
நேரத்தில் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் வழங்கப்படும். இதற்கான
சிறப்பு முகாம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பிரதி வாரம்
வியாழன் மற்றும் வௌ;ளி ஆகிய இரு நாட்கள் நடைபெறும். எனவே,
சம்மந்தப்பட்ட பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று
சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பிகளை பெற்று பயனடையும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது.