திருப்பூர், பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

திருப்பூர் மாநகராட்சி 51-வது வார்டு பெரிச்சிபாளையத்தில் 
குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு
வாகனத்தை சிறை பிடித்து அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள்  வாக்குவாதம் 
  

 திருப்பூர் மாநகராட்சி, 4-வது மண்டலத்திற்குட்பட்ட 51-வது வார்டு, பெரிச்சிபாளையம்த்தில் திரு.வி.க. செல்லும் வழியில் உள்ள சுடுகாடு உள்ளது. அங்கு பெரிச்சிபாளையம், அண்ணமார் காலனி, திரு.வி.க. நகர், வெள்ளியங்காடு, கோபால் நகர், பட்டுக்கோட்டையார் நகர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் வசிப்பவர்கள் அந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் கிடங்கு அமைக்கும் பணிக்காக 5 சென்ட் சுடுகாட்டு ஓடை நிலத்தில் ஒருபகுதியை அதிகாரிகள் தேர்வு செய்து கிடங்கு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க வேண்டாம் என்றும் மாற்று இடம் தேர்வு செய்ய கோரியும், அதிகாரிகளிடம் கோரிக்கை மற்றும் மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து வந்தனர்.   
 இந்த நிலையில் அதே இடத்தில்  உரக்கிடங்கு அமைக்க முதல் கட்ட பணிகள் செய்ய நேற்று காலை அதிகாரிகள் வந்தனர். பிரச்சனைகள் வரும் என்ற காரணத்தால் தெற்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள்  சுடுகாட்டு ஓடை நிலத்தில் பொக்லின் இயந்திர மூலம் பணிகள் தொடங்கினர். 
 அதனால் ஆத்திரமடைந்த ஊர்பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் நேற்று காலை ஒன்று கூடி 300-க்கும் மேற்பட்டவர்கள்  சுடுகாட்டிற்கு வந்தனர். அப்போது பணிகள் செய்து வந்த  பொக்லின் வாகனத்தை முற்றுகையிட்டு பணிகளை நிறுத்தினர். மேலும் அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகாரிகளான உதவி ஆணையாளர் கண்ணன், உதவி பொறியாளர் கவுரி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரனிடம் அது குறித்து கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 
அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். 
பெரிச்சிபாளையம், சுற்று வட்டார பகுதி மக்களுக்கென்று இருப்பது இந்த சுடுகாடு மட்டும் தான் இந்த சுடுகாட்டினை அப்பபோது ஊர்பொதுமக்கள் சார்பில் பணம் வசூல் செய்து சுற்றுசுவர் எழுப்பி பராமரித்து வந்தனர். மேலும் இந்த மயானத்தை சுற்றியும் கம்பெனிகள், குடியிருப்பு பகுதிகள் மிகுந்த அளவில் உள்ளது. இங்கு குப்பை கிடங்கு அமைத்தல் நாளடைவில் சுகாதார சீர்கேடு ஏற்படும், இதனால் பல தோற்று நோய் ஏற்படும் எனவும், அடிக்கடி குப்பை வாகனம் குடியிருப்பு பகுதிகள் வழியாக மயானத்திற்கு சென்று வரும் சூழ்நிலை வரும் இதனால் பல்வேறு வகையான ஆபத்துகள் வரும் எனவும், திருப்பூர்  மாநகராட்சியில் இது நல்ல திட்டம் தான் அதனை வரவேற்பதாகவும், அதே வேளையில் பெரிச்சிபாளையம் பகுதி மக்களின் மயானம் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு வேறு இடத்திற்கு மாற்று மாறு அதிகாரிகளிடம் தெரிவித்து வருவதாகவும் அதனை கண்டு கொள்ளாமல் பணிகளை தொடங்கியதால் ஆத்திரமடைந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் இங்கு கிடங்கு அமைக்க பணிகள் தொடர்ந்தால் பொதுமக்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் எனவும், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், இது குறித்து ஊர் பொதுமக்கள் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.   
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
 அந்தந்த வார்டு குப்பைகளை அந்தந்த வார்டுகளில் உரக்கிடங்கு அமைத்து உரமாக்கப்படும். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும், இது குறித்து ஊர் பொது மக்கள் கலந்து பேசி நல்ல திட்டத்தை வரவேற்க முன் வேண்டும். என தெரிவித்தனர். 
அதனை ஏற்க மறுத்த அப்பகுதி  பொதுமக்கள் நீண்ட நேரம் மயானத்தில் காத்திருந்தனர். இதனால்  பரபரப்பாக காணப்பட்டது. 


Previous Post Next Post