தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக்குங்க.. - ம.ஜ.மு.க., கோரிக்கை

திருப்பூர் : அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்க மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் அரசு பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்க கோரிக்கை  தொடர்பாக திருப்பூர் புக்ஷ்பா தியேட்டர் ஜங்சன் அருகே தனியார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் இப்ராஹிம் பாக்ஷா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது,  பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியை அரசு பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வலியுறுத்தி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம்.அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தை விடுத்து வடமாநிலங்களில் இந்தி மொழி பிரதானமாக உள்ள நிலையில் இந்தி மொழி கற்ப்பது அவசியமாகிறது எனவும், சிபி எஸ் சி போன்ற பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் இந்தி மொழி கட்டாயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர் பல்வேறு முக்கிய பணிகள் தேங்கி நிற்ப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்