கல்லூரி மாணவர் மீது தாக்குதலை கண்டித்து வேப்பூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பூர் அருகே கல்லூரி மாணவரை  தாக்கியவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கீரம்பூர் கிராமம் சேலம்- கடலூர் சாலையில் சாத்தியம் அருகே கீரம்பூர் கைகாட்டி உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கீரம்பூர் கிராமத்தில் வீசிக கொடியேற்றி அருண்பாண்டியன் என்ற கல்லூரி மாணவரை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டாயமாக சேர்ந்து அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.


அதை தடுக்க வந்த அவரது அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி மானபங்கம் செய்துள்ளனர். இதைக் கண்டித்து கீரம்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர்களும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களும் விருதாச்சலம் -சேலம் சாலையில் விசிக மண்டல செயலாளர் திருமாறன் தலைமையில் சாலை மறியல் செய்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதாச்சலம் ஏ எஸ் பி தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது விருத்தாச்சலம் தாசில்தார் கவியரசு வேப்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் கல்லூரி மாணவர் அருண் பாண்டியனை தாக்கியது தொடர்பாக ஒரு சிலரை வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதையடுத்து ஏ எஸ் பி தீபா சத்தியன் விருத்தாசலம் தாசில்தார் கவியரசு ஆகியோர் சம்பவம் நடைபெற்ற அருண்பாண்டியன் வீட்டை பார்வை யிட்டனர். மேலும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.