மதுரை துவரிமான் அருகே விபத்து 
 

மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு துவரிமான் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் விபத்து. ஆண்டிப்பட்டி பங்களாவை சேர்ந்த குருசாமி வயது 27 என்கின்ற இளைஞரும் அவரும் நண்பரும் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக மேலக்கால் மெயின் ரோடு துவரிமான் அருகே சென்று கொண்டிருந்த பொழுது சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பள்ளத்தில் விழுந்தனர்.  அங்கு கான்கிரீட் வேலைகள் நடைபெற்று வருகிறது. காங்கிரட் கம்பி கழுத்தில் குத்தியதால் வழியால் துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். விரைவாக வந்த அச்சம்பத்து மற்றும் காளவாசல் 108 வாகனம் காயமடைந்தவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்