கல்லூரி மாணவி இறப்பில் மர்மம் : பெற்றோர் குற்றச்சாட்டு


 


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காம்பர்பட்டியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்ற மாணவி ECE இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21 8 2019 அன்று மாலை 8 மணிக்கு கல்லூரி நிர்வாகம் சுற்றுலா அழைத்ததன் பேரில் 40 மேற்பட்ட மாணவ மாணவிகள் பெங்களூர் மற்றும் மைசூர் சென்றிருந்தனர். இன்நிலையில் 23 8 2019 அன்று இரவு பாண்டிச்செல்வி மர்மமான முறையில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அதனை கேள்விப்பட்ட மனைவியின் பெற்றோர்கள் அதிர்ச்சியுற்றனர். தன் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் அதை மூடி மறைப்பதாகவும் பாண்டிச்செல்வியின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். தன் மகளின் கல்வியின் மூலமாக தங்களின் குடும்பத்தின் வறுமை போகும் என்று நினைத்து இருந்த நிலையில் உயிரிழந்துவிட்டார் கல்லூரி நிர்வாகம் மகளின் இறப்பில் உள்ள மர்மத்தை மூடி மறைப்பதாக வேதனையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தன் மகளின் இறப்பில் உள்ள மர்மத்தை வெளி கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.