பழனியில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 


 

பழனியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வேதாரண்யத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து அருகிலேயே காவல் நிலையம் இருந்தும் காவலர்கள் இருந்தும் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதாலே இந்த கொடூர செயல் நடைபெற்றுள்ளது.எனவே அலட்சியமாக இருந்த காவல்துறையை கண்டித்தும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலைவர்கள் சிலை அவமதிப்பு நடைபெற்று வருகிறது இதற்கு இதுவரை எந்த ஒரு தனிச் சட்டம் இற்றாத தமிழக அரசை கண்டித்தும் இந்த அவமதிப்பு செயலுக்கு பொறுப்பேற்று  நாகை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்.வேதாராண்யம் காவல் துணை கண்கானிப்பாளர் மற்றும் கால் ஆய்வாளர் ஆகியோர் தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையாக வழக்கறிஞர் குமாரசாமி ஆர்ப்பாட்டத்தின் முன்னிலையாக வழக்கறிஞர் செல்லதுரை மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் குணசேகரன்,கலையரசன் ராதாகிருஷ்ணன், வாய்க்கால் சாமி, சுரேந்திரன், ஜீவானந்தம், சத்தியசீலன், ஆசைத்தம்பி, அங்குராஜ், உதயசங்கர், வெங்கடேஷ், செல்வகுமார், பார்த்திபன், அகிலன், விசுவநாதன், செல்வன், ஆகிய ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்த கயவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோசங்களை எழுப்பினர். மேலும் அம்பேத்கர் சிலை அவமதிப்பு ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தமிழ்நாட்டில் எந்தவொரு வழக்கறிஞரும் வாதிட கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாண்டியராஜ் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.