பல்லாவரம் ராணுவ முகாமில் ஹவல்தாரை சுட்டு கொலை






 

பல்லாவரம் ராணுவ முகாமில் ஹவல்தாரை சுட்டு கொலை செய்துவிட்டு ஜவானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம் ராணுவ பயிற்சி முகாமில் ஹவல்தாராக பணியாற்றுபவர் உத்தராகாண்டை சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி. அதே முகாமில் ஜாவானாக பிரவீன் குமார் ஜோஷியின் கீழ் பணியாற்றுபவர் பஞ்சாபை சேர்ந்த ஜக்ஷீர் சிங். நேற்று ஜக்ஷீர் சிங் சரியாக பணியாற்றதால் ஹவல்தார் பிரவீன் குமார் ஜோஷி, ஜக்ஷீர் சிங்கிற்கு தண்டனை வழங்கி உள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜக்ஷீர் சிங் இன்று அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கியால் பிரவீன் குமார் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த ராணுவ வீரர்களின் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடலையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரின் உடலும் நந்தம்பாக்கம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேஜர் உல்லா குமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல்லாவரம் காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான தனிப்படையினர் ராணுவ முகாமிற்குள் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.