குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலயத்தில் பால் குட விழாநாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலய பால் குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நாள் இரவு ஆலய வாசல் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கோட்டையா கோயிலிலிருந்து கரகம்இ பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து மேல வாத்தியம் முழங்க ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர்.பின்னர் பக்தர்கள் எடுத்து வந்து பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலாக் காட்சி நடைபெற்றது. விழாவில் ஜெய்குருதேவ்தெய்வேந்தஅடிகளார் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பொது மக்கள் மற்றும் ஆதிநாகாத்தம்மன் சக்திபீடம் அறக்கட்டளையின் சார்பில் செய்திருந்தனர்.