பழனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம்


 

பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மேலும் இந்த முகாமில் பல்வேறு பொதுப் பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மேலும் இந்த பகுதிகளில் நடக்கக் கூடிய சட்ட விரோதமான செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். அரசின் சலுகைகளை அதிகாரிகள் முறையாக அறிவிப்புகள் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.இந்த முகாமில் அரசின் நலத் திட்டங்களான சமையல் எரிவாயு அடுப்புகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேற்கண்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டனர். இம்முகாமிற்க்கு துணை ஆட்சியர் உமா முன்னிலை வகித்தார். அனைத்து வட்டாட்சியர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன்,நகராட்சி ஆணையர் நாராயணன், உள்ளிட்ட அதிகாரிகளும் வருவாய் துறையை உள்ளடக்கிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் இம்முகாமில் கலந்து கொண்டனர்.முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு மனுக்கள் ஒவ்வொரு தாலுகா வாரியாக வழங்கும் இடம்,குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்..