பழனியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


 

பழனி குளத்து ரவுண்டானா அருகில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 30% பெண்கள் மட்டும்தான் பெண்மை தன்மையுடன் வாழ்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்ட துக்ளக் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தும் பெண்களின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார் எனவே தமிழ்நாட்டில் புனிதமாக போற்றப்படும் கூடிய பெண்களை இழிவுபடுத்திப் பேசிய குருமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் மேலும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் இனி வரும் காலங்களில் பெண்களைப் பற்றி ஏதாவது தவறான வார்த்தைகள் பேசினாலும் அறிவிப்பு வெளியிட்டாலோ அவர்மீது கடுமையான சட்டம் பாய வேண்டும் என்றும் குருமூர்த்திக்கு எதிராக பல்வேறு வன்மையான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் கையில் சங்க கொடியுடன் பல்வேறு வன்மையான கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

 

 

Previous Post Next Post